மாவத்தை விளையாட்டுக்கழகத்தின் வரலாறு
     
     
 
 
எங்கள் மாவத்தை விளையாட்டுக்கழகம் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டதாக எங்கள் முதியோர்கள் நினைவுகூறுவர். ஆனால் 1889.01.10ல் ஆரம்பிக்கப்பட்டதாக அமரர் நாகலிங்கம் சின்னையா எங்களுக்கு நினைவு கூறுவார். முன்பு D.R.O ஆட்சி வலிகாமம் மேற்கு பிரிவிற்கு இருந்த காலம் இவ் அலுவலகம் சங்கானையில் இருந்தது. அவ் அலுவலகம் பின்பு உதவி அரசாங்க அதிபர் காரியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது பிரதேச செயலாளர் காரியாலயமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. D.R.O வலி மேற்குப் பிரிவிற்கு உட்பட்டதுதான் அராலிக்கிராமம். எங்கள் அராலிக் கிராமம் நான்கு பிரிவுகளாக இருந்தகாலம் அராலி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இருந்தது வட்டுக்கோட்டை கிராம சபை என ஒரு நிர்வாகம் இருந்தது. அந்தக்காலத்தில் 20 வட்டாரமாக அராலி தெற்குப்பகுதி பிரிக்கப்பட்டு 20வது வட்டாரத்தில் மாவத்தைக்கழகம் இயங்கி வந்தது.
 
     
 
D.R.O என்றவர் அராலிக்கிராமத்தை செல்லப்பா அம்பலவாணர் என்பவருக்கு உடையார் என்ற ஒரு பதவி வழங்கி அவரை அராலிப் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி செய்த காலம் செல்லப்பா அம்பலவாணர் உடையாரின் காணி தான் மாவத்தை விழையாட்டு மைதானமாக இருந்தது. இந்த மைதானத்திற்கு மண்ணின் பெயருடன் இந்த காணிக்கு பெயர்தான் மாவத்தை என இருந்தது. அந்தக்காலப் பகுதிக்குரிய எமது முதியோர்கள் மாவத்தை எனும் பெயருடன் ஆரம்பித்து வைத்தனர் மாவத்தை விளையாட்டுக் கழகத்தினை. எமது மாவத்தை முன்னய காலம் 1970 வரை ஒரு தரிசு நிலமாக இயற்கையாக வடக்குப்பக்கம் இரண்டு பனைகள் தெற்கு பக்கம் இரண்டு பனைகள் இயற்கையாக இருந்தனவாம். இவ்வாறு இயற்கையான உதைபந்தாட்ட மைதான அமைப்பை கொண்டதாக விளையாட்டு மைதானம் அமைந்தது. உதைபந்தாட்டப் போட்டிகளின் போது இரண்டு பனைகளிலும் 6 அடி உயரத்தில் கயிறு கட்டி விளையாடி வந்தனர் என்று முதியோர் கூறினர். இம்மைதானத்தின் சிறப்பு என்னவென்றால் களிமண்ணுடன் மணல் சார்ந்த கலவையாக இருப்பதே இம்மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவதற்கு சாத்தியம் குறைவாக காணப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.
 
     
 
முன்னைய காலங்களில் தைப்பொங்கல் அன்று பொங்கல் விழா என கொண்டாடி வந்தபோது அராலி களவத்துறை சனசழூக நிலையத்தினர் இரவு நிகழ்வாக பொங்கல் விழா கொண்டாடி வந்தனர். களவத்துறை சனசழூக நிலையமும் மாவத்தை விளையாடடுக்கழகமும் ஒரு பெயருடன் விழாவை நடத்தி வந்ததால் எமது கழகம் தைப்பொங்கல் தினமன்று பெயர் மாற்றம் செய்து கொண்டாடியதுதான் “உழவர் விழா”. இவ் விழாவினை 1975ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரைக்கும் கொண்டாடி வருகின்றோம்.
 
     
 
1972ம் ஆண்டு செல்லப்பா அம்பலவாணரின் மருமகன் பாலசிங்கம் என்பவர் மாவத்தை மைதானத்தினை குடியிருப்புக் காணியாக விற்பதற்கு ழூன்று கிணறுகள், தென்னம்பிள்ளைக் கிடங்குகள், முட்கம்பி வேலிகள் ஆகியவற்றை அமைத்தபோது எமது விளையாட்டு வீரர்களும் ஆதரவாளர்களும் வேலிகளை பிடுங்கி கிணறுகளை ழூடி அவரை விற்கச்செய்யாது எதிர்ப்பினை தெருவித்தனர். பாலசிங்கம் என்பவர் சங்கானையில் இருந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். எமது கழக உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்து வைத்திருந்தனர். உடனடியாக உதவி அரசாங்க அதிபர் சோ.அருணாச்சலம் உடன் தலையிட்டு எங்கள் கழக உறுப்பினர்களை விடுதலை செய்து மாவத்தை விளையாட்டு மைதானமாக பிரகடனம் செய்தார். மீண்டும் மாவத்தை விழையாட்டுக்களகம் கொடிகட்டிப் பறந்தது.
 
     
 
இதற்கு முன்னர் விளையாட்டு வீரரான சின்னையா என்பவரை மாவத்தை உடையார் என நியமித்து விளையாடிக்கொண்டிருக்கும் போது அராலி ஜயனார் கோவிலடி அண்ணா விளையாட்டுக்கழகம் ஒன்று தங்கள் மைதானத்தில் மழைகாலத்தில் மழைவெள்ளம் வந்தால் எமது கழகத்தில் அனுமதி பெற்று மாதத்தில் இரண்டு போட்டிகளை நடத்தி வந்தனர். காலப்போக்கில் அவர்கள் பலவந்தமாக இறங்கி பிரச்சனை செய்தனர். இதனால் முன்னால் சங்கானை உதவி அரசாங்க அதிபர் அமரர்.து.வைத்திலிங்கம் ஒரு விஷேட கூட்டத்தினை கூட்டி இரண்டு கழகத்தையும் விசாரித்தார். அப்போது அண்ணா விளையாட்டுக்கழகம் தங்களுக்கு ஒரு மைதானம் இருப்பதை ஒப்புப்கொண்டது. பின்னர் தாங்கள் அவ் விளையாட்டு மைதானம் பாவனை செய்யும் அளவிற்கு இல்லை என்று கூறியதால் மைதானம் திருத்தும் வரை உதைபந்தாட்;ட காலத்தில் இரண்டு தினங்கள் விளையாட அனுமதி வழங்கி இரண்டு கழகத்தினரும் கையொப்பம் இட்டனர், இவ்வாறு எமது விளையாட்டுக்களகத்தின் வரலாறு கூறுகின்றது.
 
     
 

இவ்விளையாட்டு கழக மைதானத்திற்கு பல அரசியல்வாதிகள் வந்து சென்றனர்.

1976ம் ஆண்டு ரட்ணநாயக்க விளையாட்டு அமைச்சர் வந்து எமது கழக வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

2004ம் ஆண்டு தமிழ் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் வந்துள்ளார்.

2006ம் ஆண்டு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர்நாதன் அவர்கள் வந்துள்ளார்.

2011ம் ஆண்டு மகேஸ்வரன் வி;ஜயகலா (ஜ.தே.க) பாராளுமன்ற உறுப்பினர் வந்துள்ளார்.

2012ம் ஆண்டு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் வந்துள்ளார்.

இவ்வாறு பல கல்விமான்கள், பல அறிஞ்ஞர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.

எங்கள் கழகம் யாழ்மாவட்டத்தின் சிறந்த கழகமாக பல வருடங்களாக விளங்குகிறது.

 
     
   
   
   
     

Copyright 2011 © . All rights reserved Mawatta Sports Club.  Design By : S.Majureshan.